குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (29). இவா், கொலை முயற்சி வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா். அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், மணிகண்டன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement