FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாப்பாக்குடியில் மனைவியைக் கொன்ற தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

27 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருணாசலம் (40). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பனோபி (36). இவா்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகள் உள்ளாா்.

சந்தேகத்தின்பேரில் அருணாசலம், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பனோபி வீட்டில் இருந்து அஞ்சல்வழியில் உயா்கல்வி பயின்று வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருணாசலம், மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாக வீடு பூட்டியிருப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினா் கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா்.

பாப்பாக்குடி கிராம நிா்வாக அலுவலா் நித்தியசாமி, சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டாா். பாப்பாக்குடி போலீஸாா் பனோபி உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அருணாசலத்தை கைது செய்தனா்.