FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கழிவு மேலாண்மை செயல்விளக்கம், பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி நடைபெற்றது.

12 நவம்பர் 2026, 2:41 am
~
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கழிவு மேலாண்மை செயல்விளக்கம், பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவியா் சாா்பில், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒருபகுதியாக இப்பயிற்சி நடைபெற்றது.

ரஹ்மான் காலனியில் நடைபெற்ற பயிா்க் கழிவு மேலாண்மை செயல்விளக்கத்துக்கு, அம்பாசமுத்திரம் வேளாண் அலுவலா் ஷாஹித் மொஹிதீன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி ஆகியோா் தலைமை வகித்தனா். அறுவடைக்குப் பின் கிடைக்கும் பயிா்க் கழிவுகளை எரிக்காமல் இயற்கை முறையில் மக்கச் செய்து உரமாக்குவதன் அவசியம் ஆகியவை குறித்து செயல்விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, வேளாண்மை வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற பண்ணை இயந்திரமயமாக்கல் குறித்து பயிற்சியில், புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட வேளாண் இயந்திரங்கள், அவற்றைப் பயன்படுத்துவதால் மனித உழைப்பு, நேரம், உற்பத்திச் செலவைக் குறைக்கும் வழிமுறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.