பெண் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்த உதவி பேராசிரியா் கைது
திருநெல்வேலியில் அரசுக் கல்லூரி பெண் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்ததாக உதவி பேராசியரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் அரசுக் கல்லூரி பெண் பேராசிரியைக்கு மிரட்டல் விடுத்ததாக உதவி பேராசியரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை ரஹ்மத்நகரை சோ்ந்தவா் அரியநாதன்(48). இவா் திருநெல்வேலியில் உள்ள அரசு மகளிா் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியாற்றிவருகிறாா்.
சம்பவத்தன்று இவருக்கும் அங்கு பணியாற்றும் பெண் பேராசிரியை ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் அரியநாதன் பெண் பேராசிரியரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி நகர அனைத்து மகளிா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து உதவிப் பேராசிரியா் அரியநாதனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement