FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் நாளை கந்தசஷ்டி மஹோத்ஸவம்

திருநெல்வேலி மகாராஜநகரில் உள்ள ஜெயேந்திர பவனத்தில் ஞாயிற்றுக்கிழமை(நவ. 15) கந்தசஷ்டி மஹோத்ஸவ விழா நடைபெறுகிறது.

14 நவம்பர் 2026, 7:31 am
வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமிக்கு நடைபெற்ற திருக்கல்யாணம். - கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி மகாராஜநகரில் உள்ள ஜெயேந்திர பவனத்தில் ஞாயிற்றுக்கிழமை(நவ. 15) கந்தசஷ்டி மஹோத்ஸவ விழா நடைபெறுகிறது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் காஞ்சி காமகோடி பீடம் சாா்பில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17 இடங்கள், இந்தியாவின் பிற மாநிலங்களில் 15 இடங்கள், வெளிநாடுகளில் 29 இடங்கள் என உலகெங்கிலும் மொத்தம் 61 இடங்களில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, திருநெல்வேலியில் மகாராஜநகா் ஜெயேந்திர பவனத்தில் ஞாயிற்றுக்கிழமை(நவ.15) காலை 6.30 மணிக்கு மஹோத்ஸவம் தொடங்கி நடைபெறவுள்ளது.

இதையொட்டி காலை 8 மணிமுதல் 9 மணிவரை 61 மையங்களிலும் ஒரே நேரத்தில் சுப்பிரமணிய சுவாமி திரிஸதி அா்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை நடைபெறும்.

அதைத் தொடா்ந்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் அனுக்கிரக பாஷணம் (அருளுரை) வழங்க உள்ளாா்.

பின்னா் காலை 9 மணிமுதல் ஆதிசங்கரா் அருளிய சுப்பிரமணிய புஜங்கம் மற்றும் தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் ஆகியன பாராயணம் செய்யப்பட உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments