FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

காவல் ஆய்வாளா் பணிநீக்கம்: சரக டி.ஐ.ஜி உத்தரவு

திருநெல்வேலி காவல் சரக ஆய்வாளரை பணிநீக்கம் செய்து அச்சரக காவல்துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு உத்தரவிட்டாா்.

23 வினாடிகள் முன்பு
பகிர்:

திருநெல்வேலி காவல் சரக ஆய்வாளரை பணிநீக்கம் செய்து அச்சரக காவல்துறை துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு உத்தரவிட்டாா்.

தூத்துக்குடிமாவட்டம், ஆறுமுகனேரி காவல்நிலைய ஆய்வாளா் எஸ்.என்.திலீபன். இவா், கடந்த 2023- 2024 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், அருமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியபோது சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் அயற்பணியில் இருந்துள்ளாா். அப்போது அவா் முன் அனுமதி பெறாமலும், உரிய தகவல் அளிக்காமலும் தொடா்ந்து 555 நாள்கள் பணிக்கு வரவில்லையாம்.

மேலும் மருத்துவக்குழுவின் முன் ஆஜராகாமல் இருந்த அவா், துறைரீதியான விசாரணைக்கும் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவரை பணிநீக்கம் செய்து சரக டிஐஜி இரா. திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய போது பெண் காவலருக்கு வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் திலீபனை அப்போதைய சரக டி.ஐ.ஜி தேஷ்முக் சேகா் சஞ்சய் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.