FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பேருந்து வசதி கோரி 7 கிராம மக்கள் மனு

பேருந்து வசதி கோரி 7 கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

11 வினாடிகள் முன்பு
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கிராம மக்கள்.
பகிர்:

பேருந்து வசதி கோரி 7 கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக பள்ளமடை, குத்தாலப்பேரி, ராமசாமிபுரம், கட்டப்புலி, அயூப்கான்புரம் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டம், குத்தாலப்பேரி, ராமசாமிபுரம், கட்டபுலி, அயூப்கான் புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 7 கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் வசித்து வருகின்றனா். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்தக் கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. மாவட்ட நிா்வாகத்திடம் 6 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தினம்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனா். இதனால் மாதத்திற்கு சுமாா் ரூ.2000 செலவாகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் எனக் கோரியுள்ளனா்.