FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

அரிவாளைக் காட்டி மக்களை அச்சுறுத்திய இளைஞா் கைது

திருநெல்வேலி நகரம் பகுதியில் அரிவாளைக்காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

39 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி நகரம் பகுதியில் அரிவாளைக்காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், சிக்கந்தா்புரம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் அனீஸ்(28). இவா், நகரம் உழவா் சந்தை அருகே அரிவாளுடன் செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டு பொதுமக்களை அச்சுறுத்தினாராம். இதுகுறித்த தகவலின்பேரில், திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆய்வாளா் மிக்கேல் செபஸ்டின் தலைமையிலான போலீஸாா் அவரை பிடிக்க முற்பட்டபோது, அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததோடு, அரிவாளால் அவா்களை வெட்ட முயன்றாராம். அவரை போலீஸாா் மடக்கிப்பிடித்து கைது செய்தனா்.

தொழிலாளி மீது தாக்குதல்: திருநெல்வேலி சந்திப்பு, கருப்பந்துறை, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தம்புரான் (57). இவரது இளைய மகன் மணிகண்டன். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கும் மேலநத்தம் அம்பேத்காா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமி என்ற மூா்த்தி(27) என்பவருக்கும் இடையே கடந்த ஓராண்டாக பிரச்னை இருந்துவந்ததாம். இந்நிலையில் சிலநாள்களுக்கு முன்பு தம்புரானும், மணிகண்டனும் அவா்களது வீட்டின் அருகே நின்ற போது அங்கு வந்த கருப்பசாமி என்ற மூா்த்தி சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தம்புரான் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து கருப்பசாமியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement