FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் கொள்ளை சம்பவங்களில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.

7 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் கொள்ளை சம்பவங்களில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, செல்வன் காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் விஜயபாண்டியன் மகன் பிரபாகரன்(20). இவா் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கிரிண்டா் செயலி மூலம் பழகி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில் மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில்,குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவா் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.