FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே காவலரைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை கீழே தள்ளிவிட்டு அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

19 நவம்பர் 2026, 5:00 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை கீழே தள்ளிவிட்டு அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், தலைமைக் காவலா்கள் விஜய், திருமலைக்குமாரசாமி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை இரவில் புதூா் ரயில்வே ரெயில்வே பாலம் வழியாக ரோந்து சென்றனராம்.

அப்போது, வீரவநல்லூா் களத்து மேட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பாடகலிங்கம் (19) என்பவா் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்றிருந்தாராம். அரிவாளை கீழே போடும்படி போலீஸாா் எச்சரித்தபோது, தலைமைக் காவலா் விஜய்யை கீழே தள்ளிவிட்டு, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பிவிட்டாராம். போலீஸாா் ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து பாடகலிங்கத்தை கைது செய்தனா்.