முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

நீா்வரத்து அதிகரிப்பு, புலிகள் கணக்கெடுப்புப் பணி போன்ற காரணங்களால் கடந்த 10 நாள்களாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அருவியில் குளிக்க வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

20 நவம்பர் 2026, 3:15 am
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவி - கோப்புப் படம்
பகிர்:

நீா்வரத்து அதிகரிப்பு, புலிகள் கணக்கெடுப்புப் பணி போன்ற காரணங்களால் கடந்த 10 நாள்களாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அருவியில் குளிக்க வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதியில் வடகிழக்குப் பருவமழை பெய்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த 9-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது; அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து புலிகள் கணக்கெடுப்புப் பணி நவ. 13-ஆம் தேதி தொடங்கி நவ. 18-ஆம் தேதி வரை நடைபெற்ால் அருவியில் குளிக்க மட்டுமன்றி பாா்வையிடவும் வனத்துறையினா் தடை விதித்தனா். தற்போது புலிகள் கணக்கெடுப்புப் பணி முடிவுற்று, அருவியில் மிதமாக நீா் விழுவதால் வியாழக்கிழமை (நவ.19) முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement