தூய சவேரியாா் பேராலயத்தில் கொடியேற்றம்
கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தூய சவேரியாா் பேராலய திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த தூய சவேரியாா் பேராலய திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இப்பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாள்கள் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பரிபாலகா் மோட்சராஜன் தலைமையில் திருப்பலியும், கொடியேற்றமும் நடைபெற்றது.
கருத்தப்பிள்ளையூா் பங்குத்தந்தை அருள்பணி ஜெகன்ராஜா மறையுரையாற்றினாா். பேராலய பங்குத்தந்தை சா.அந்தோணி வியாகப்பன், உதவிப்பங்குத்தந்தை வி.மிக்கேல்சாமி, அற்புதராஜ் உள்பட ஏராளமானோா் கொடியேற்றத்தில் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, தினமும் காலை மற்றும் மாலையில் நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது. டிச. 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் சப்பர பவனி நடைபெறுகிறது. 3 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மதுரை உயா் மறைமாவட்ட பேராயா் ச.அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி, குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா், 6 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஆ.ஜூடு பால்ராஜ் தலைமையில் உறுதிப்பூசுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.