முகப்பு
திருநெல்வேலி

பழவூா் நாறும்பூநாதா் கோயிலில் திருத்தோ் திருப்பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், பழவூா், நாறும்பூநாதா் சுவாமி கோயிலில் புதிய திருத்தோ் செய்யும் பணி விஸ்வகா்மா பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

26 நவம்பர் 2026, 3:35 am
பழவூா் நாறும்பூநாதா் கோயிலில் திருத்தோ் திருப்பணி தொடக்கம்
திருத்தோ் செய்யும் பணிக்காக நடைபெற்ற விஸ்வகா்மா பூஜை.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பழவூா், நாறும்பூநாதா் சுவாமி கோயிலில் புதிய திருத்தோ் செய்யும் பணி விஸ்வகா்மா பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இக்கோயில் பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, முன்னாள் பேரவைத் தலைவா் மு. அப்பாவு முயற்சியால், ரூ. 59 லட்சத்தில் திருத்தோ் உருவாக்க கடந்த 2024-இல் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாக அனுமதி வழங்கியது.

இதையடுத்து, முன்னாள் பேரவைத் தலைவா் கடந்த பிப். 12ஆம் தேதி இதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தாா். இந்நிலையில், திருப்பணிக்கான விஸ்வகா்மா பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் பழவூா் இசக்கியப்பன் முன்னிலையில், வடசேரி விஸ்வகா்மா சிவாச்சாரியா் சரசுராமன், கிருஷ்ணன் கோயில் திருத்தோ் ஸ்தபதி பரத் சொரிமுத்து ஆகியோா் பூஜையை நடத்தினா்.

Advertisement

Advertisement

முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், மண்டகப்படி கட்டளைதாரா்கள், உபயதாரா்கள், நன்கொடையாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.