கும்பகோணம் இராமசாமி கோயிலில் திருப்பணி தொடக்கம்! அடுத்த ஆண்டு குடமுழுக்கு!
இராமசாமி ஆலயத்தில் ரூ. 2 கோடி மதிப்பில் திருப்பணி தொடங்கியது பற்றி..
இராமசாமி ஆலயத்தில் ரூ. 2 கோடி மதிப்பில் திருப்பணி துவங்கிய நிலையில், அடுத்த ஆண்டு திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு விழா நடத்தப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இராமசாமி ஆலயம் கட்டப்பட்டது. சிற்பங்கள் நிறைந்த இந்த ஆலயம், மகாமகம் தொடர்புடைய 5 வைணவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
Advertisement
Advertisement
சுமார் ரூ. 2 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யத் திட்டமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் இன்று துவங்கியது. திருப்பணிகள் துவக்கத்திற்கான பாலாலயம் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கும்பகோணம் நகரில் 2028 ஆம் ஆண்டு மகாமக விழா நடைபெற உள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த ஆலயத்தினை தவிர மற்ற அனைத்து ஆலயங்களிலும் மகாமக விழாவிற்கு முன்னதாக குடமுழுக்கு விழா நடைபெறும்.