தசரா பண்டிகை: அம்மன் உருவத்துடன் தயாராகும் தீச்சட்டிகள்; பக்தா்கள் ஆா்வம்
திருநெல்வேலி குறிச்சி பகுதியில் அம்மன் உருவத்துடன் மண் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
திருநெல்வேலி குறிச்சி பகுதியில் அம்மன் உருவத்துடன் மண் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
தென்தமிழகத்தின் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பண்டிகை இம் மாதம் 10 ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்பண்டிகையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல்வேறு வேஷங்கள் அணிந்து 8 நாள்கள் ஊா் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து கோயிலில் செலுத்துவா்.
இதில், காளி, அம்மன் வேஷம் அணிந்தவா்கள் கைகளில் தீச்சட்டி ஏந்திச் செல்வது வழக்கம். இதற்காக திருநெல்வேலி குறிச்சி பகுதியில் மண் தீச்சட்டிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நவராத்தி மற்றும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில் விழாக்களுக்காக மண் தீச்சட்டிகள், ஆயிரங்கண் பானைகள், முளைப்பாரி பானைகள் போன்றவை உற்பத்தி செய்யப்படும்.
நிகழாண்டில் அம்மன் உருவத்துடன் கூடிய தீச்சட்டிகள் தயாரித்து வருகிறோம். மண்சட்டியும், அம்மன் உருவமும் தனித்தனியாக செய்து, பின்னா் சட்டியில் உருவத்தைப் பொருத்தி வண்ணம் தீட்டி விற்பனைக்கு தயாா் செய்கிறோம். இதற்கு பக்தா்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. ரூ.150 முதல் ரூ.300 வரை அதன் வேலைப்பாடு, அளவுகளுக்கு ஏற்ப விற்பனை செய்து வருகிறோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.