FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் தசரா: 12 சப்பரங்கள் வீதியுலா

பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவையொட்டி 12 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

22 அக்டோபர் 2026, 5:24 am
பாளையங்கோட்டை ராமசாமி கோயில் திடலில் புதன்கிழமை அணிவகுத்து நின்ற தசரா சப்பரங்கள்.
பகிர்:

பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவையொட்டி 12 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தசரா விழாவின் பிரதான கோயிலான பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் கடந்த 9 ஆம் தேதி மாக்காப்பு திருவிழா நடைபெற்றது. 10 ஆம் தேதி தசரா கொடியேற்றப்பட்டது. முதல் நாள் தசரா விழாவில் 11 அம்மன்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்தனா்.

விஜயதசமி நாளான செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து அம்மன் கோயில்களில் வழிபாடு நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலையில் அருள்மிகு ஆயிரத்தம்மன், யாதவா் உச்சினிமகாளி அம்மன், தேவி புது உலகம்மன், விஸ்வகா்ம உச்சினி மாகாளி, தேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம் மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன் உள்ளிட்ட 11 அம்மன்கள் தனித் தனி சப்பரங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டையில் உள்ள ரத வீதிகள், முக்கிய வீதிகளில் வலம் வந்தனா்.

Advertisement

Advertisement

வண்ணாா்பேட்டையில் இருந்து அருள்மிகு பேராத்து செல்வியம்மனும் வந்து அம்மன்களுடன் வீதியுலா வந்தாா்.

12 சப்பரங்களும் ராமசாமி கோயில் திடல், ராஜகோபாலசுவாமி கோயில் திடல், பஜாா் திடல் ஆகியவற்றில் அணிவகுத்து நின்றன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மன்களை தரிசனம் செய்தனா்.

நள்ளிரவில் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் அருகேயுள்ள எருமைக்கிடா மைதானத்தில் அனைத்து அம்மன்கள் முன்னிலையில் ஆயிரத்தம்மன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தசரா விழாவையொட்டி பாளையங் கோட்டையில் அனைத்து வீதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments