FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மேலச்செவல் அருகே தனியாா் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் அருகே தனியாா் பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாா் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் அருகே தனியாா் பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலச்செவல் அருகே வாணியன்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமம் வழியாக திருநெல்வேலிக்கு அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றனா். காலை வேளையில் தனியாா் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்தக் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கும், வெளியூா்களுக்கும் செல்வோா் தனியாா் பேருந்தில் பயணித்து வந்தனா். சில நாள்களாக இப்பேருந்து, வாணியன்குளத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லையாம். இதனால், பொதுமக்கள், மாணவா்கள் 3 கி.மீ. தொலைவிலுள்ள மேலச்செவலுக்கு வந்து, திருநெல்வேலி உள்ளிட்ட ஊா்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அந்தத் தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமையும் வாணியன்குளத்தில் நிற்காமல் செல்ல முயன்ாம். இதையறிந்த கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து, ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலச்செவல் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி இறக்கிச்செல்ல வேண்டும் என, ஓட்டுநா், நடத்துநரை காவல் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments