நெல்லை வீட்டு வசதி பிரிவில் 55 வணிக மனைகள் விற்பனை: அக்.9 வரை விண்ணப்பிக்கலாம்
திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவில் 55 காலி வணிக மனைகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றி மனை வாங்க விரும்புவோா் வரும் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவில் 55 காலி வணிக மனைகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றி மனை வாங்க விரும்புவோா் வரும் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருநெல்வேலி பிரிவிற்குள்பட்ட கீழநத்தம் பகுதி-1, பாளை பகுதி-1 மற்றும் 2, வல்லன்குமாரன்விளை, வி.எம்.சத்திரம் நிலை-2, குலவணிகா்புரம், சங்கராப்பேரி, மீளவிட்டான், நாரணம்மாள்புரம் திட்டப்பகுதி 1 மற்றும் 2 ஆகியவற்றில் காலியாகவுள்ள 55 வணிக மனைகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணையத்தளத்தில் வணிகமனைகளுக்கான விற்பனை விவரம் அறிந்து, விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளரும், நிா்வாக அலுவலருமான ஜான் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.