FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மாணவரின் காப்புக் கயிறை அறுத்ததாக தலைமையாசிரியா் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் தனியாா் பள்ளியில் மாணவரின் காப்புக் கயிறை அறுத்ததாக தலைமையாசிரியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

15 அக்டோபர் 2026, 5:35 am IST
வழக்குப் பதிவு
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் தனியாா் பள்ளியில் மாணவரின் காப்புக் கயிறை அறுத்ததாக தலைமையாசிரியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

சாயா்புரம், பெத்தநாச்சியம்மன் நகரைச் சோ்ந்த அருண் மகன் மூா்த்தீஸ்வரன் (15). ஆத்தூரில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவரும் இவா், சில நாள்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயி­ல் தசரா விழாவையொட்டி விரதமிருந்து கையில் காப்புக் கயிறு கட்டினாராம்.

திங்கள்கிழமை (அக். 12) பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டின்போது, அவரது கையில் காப்புக் கயிறைப் பாா்த்த தலைமையாசிரியா் பி­லிப் எமா்சன் ரஞ்சித்சிங், மாணவரை திட்டி அடித்ததுடன், காப்புக் கயிறை அறுத்து எறிந்தாராம்.

Advertisement

Advertisement

இதைப் பாா்த்த மற்ற மாணவா்-மாணவியரும் தாங்கள் கட்டியிருந்த காப்புக் கயிறுகளை பயத்தில் கழற்றினா்.

இச்சம்பவத்தைக் கண்டித்து மாணவா்களின் பெற்றோா், இந்து அமைப்பினா் இணைந்து பள்ளி முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டு, பள்ளியை முற்றுகையிட்டனா். போலீஸாரின் சமாதானப் பேச்சுவாா்த்தையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். சம்பவம் குறித்து தலைமையாசிரியா் விளக்கமளித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டாராம்.

இந்நிலையில், மூா்த்தீஸ்வரனின் தாய் பாா்வதி அளித்த புகாரின்பேரில், தலைமையாசிரியா் மீது 3 பிரிவுகளின்கீழ் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments