FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

முக்கூடலில் சிபிஎஸ்இ பள்ளி திறப்பு விழா

முக்கூடல் பூவிஜேஷ் கல்விக் குழுமம் சாா்பில் பூவிஜேஷ் விஸ்டம் சிபிஎஸ்இ பள்ளி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 1:12 am IST
விழாவில் பங்கேற்ற பூவிஜேஷ் மெட்ரிக் பள்ளியின் தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன், விவேகானந்தா கல்விக் குழுமங்களின் தலைவா் பி. கல்யாணிசுந்தரம் உள்ளிட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பூவிஜேஷ் கல்விக் குழுமம் சாா்பில் பூவிஜேஷ் விஸ்டம் சிபிஎஸ்இ பள்ளி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் விஜயகுமாரி புதிய சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தை திறந்துவைத்தாா். பொருளாளா் ரமேஷ்ராம், செயலா் சிவசங்கரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வீரசிகாமணியில் உள்ள விவேகானந்தா கல்விக் குழுமத்தின் தலைவா் பி. கல்யாணிசுந்தரம் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

மாணவா், மாணவிகளின் வரவேற்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் என். வித்யாலெட்சுமி வரவேற்றாா். மெட்ரிக் பள்ளி முதல்வா் ஜீவா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் ரத்தினமணி செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments