ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்படுத்தியவா் கைது
வள்ளியூரில் தனியாா் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கல்லால் உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வள்ளியூரில் தனியாா் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை கல்லால் உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வள்ளியூா் வடக்கு பிரதான சாலையில் எஸ்.டி.என். கட்டடத்தில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வெளியே தனி அறையில் ஏ.டி.எம்.இயந்திரம் உள்ளது.
இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்த நபா் குடிபோதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை கல்லால் உடைத்துவிட்டு சென்றாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வங்கி மேலாளா் சவுந்திரபால் வள்ளியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து, இயந்திரத்தை உடைத்த சாத்தான்குளத்தை அடுத்த கீழகருங்கடலைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் செல்வனை (25) கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.