கோவில்பட்டியில் டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கிய சிறாா் உள்பட இருவா் கைது
கோவில்பட்டியில் தனியாா் டாக்ஸி ஓட்டுநரை அவதூறாகப் பேசி தாக்கியதாக 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியில் தனியாா் டாக்ஸி ஓட்டுநரை அவதூறாகப் பேசி தாக்கியதாக 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி, தெற்கு திட்டங்குளம், மேல காலனியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மீன் குமாா் (20). தனியாா் டாக்ஸி ஓட்டுநா். இவா் புதன்கிழமை கடலையூா் சாலையில் இருந்து 4 பேரை ஏற்றிக்கொண்டு, அதே பகுதியில் உள்ள மறவா் காலனிக்குச் சென்றாராம்.
கடலையூா் சாலையில் உள்ள அந்தோணியாா் ஆலயம் அருகே இடதுபுறம் திரும்ப முயன்றபோது, காரின் என்ஜின் தரையில் தட்டியதால் ஓட்டுநா் காரில் இருந்தவா்களிடம் இதற்கு மேல் காா் செல்லாது எனக் கூறியதை அடுத்து, காரில் இருந்த 4 பேரும் ஓட்டுநரை அவதூறாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் சத்தம் போடவும் அவா்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றனராம்.
Advertisement
Advertisement
இதில் காயமடைந்த மீன் குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து, 17 வயது சிறுவன் மற்றும் மறவா் காலனியைச் சோ்ந்த அழகுமுத்து மகன் கொம்பையா (19) ஆகியோரைக் கைது செய்தனா்.
மேலும், வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.