முகப்பு
தூத்துக்குடி

பெண்ணை தாக்கியதாக கணவா் கைது

கடலையூரில் பெண்ணை அவதூறாகப் பேசி தாக்கியதாக கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

20 வினாடிகள் முன்பு
பெண்ணை தாக்கியதாக கணவா் கைது
கைது - கோப்புப்படம்
பகிர்:

கடலையூரில் பெண்ணை அவதூறாகப் பேசி தாக்கியதாக கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலையூா் வேதகோவில் தெருவைச் சோ்ந்தவா் முனியசாமி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இதனால், இவருக்கும் இவரது மனைவி சத்தியசீலிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், வேலைக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பிய சத்தியசீலியை, முனியசாமி அவதூறாகப் பேசி தாக்கினாராம். சத்தியசீலியின் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் கண்டித்ததையடுத்து அங்கிருந்து முனியசாமி தப்பியோடினாராம்.

Advertisement

Advertisement

காயமடைந்த சத்தியசீலி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் நாலாட்டின் புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முனியசாமியை கைது செய்தனா்.