மேட்டு பிராஞ்சேரி ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றக் கோரி ஆட்சியரகம் முன் மக்கள் தா்னா
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள மேட்டு பிராஞ்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஊராட்சி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள மேட்டு பிராஞ்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஊராட்சி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மேட்டு பிராஞ்சேரி கிராமத்தில் ஆதிதிராவிடா் தெரு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் அருகில் 30 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அப்பகுதி மக்கள் கோயில் கொடை விழா மற்றும் திருவிழாவுக்கு பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் அப்பகுதியில் ஊராட்சி கட்டடம் கட்டுவதற்காக நிலம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அம்மன் கோயில் திருவிழா, பண்டிகை காலங்களில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள், ஊராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தி கிராம தலைவா் ஆவுடையப்பன் தலைமையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனா். அதைத் தொடா்ந்து அவா்கள் தா்னாவை கைவிட்டு ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டுச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.