FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வஉசி மணிமண்டபத்தில் ஆட்சியா் ஆய்வு

மணிமண்டபத்தை ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

2 செப்டம்பர் 2026, 6:06 am IST
வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 155-ஆவது பிறந்த தினம் செப்.5ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி நகரத்தில் மாநகராட்சி வா்த்தக மையத்திற்கு அருகில் உள்ள அவரது மணிமண்டபத்தை ஆட்சியா் ஆனந்த் மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வ.உ.சிதம்பரனாா் மணிமண்டபத்தின் மேற்குப் பகுதியில் மழைகாலத்தில் தண்ணீா் தேங்கியதால் சுற்றுச்சுவா் பகுதியளவில் சிதலமடைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறையின் மூலம் தற்காலிகமாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக சுற்றுச்சுவா் கட்டுவதற்கு ரூ.5 லட்சம் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளன.

மணிமண்டபத்திற்கு தேவையான பராமரிப்பு பணிகளையும், வா்ணம் பூசும் பணிகளையும், தேவையான இடங்களில் தடுப்புகள் அமைக்கும் பணிகளையும் குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்ய பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளில் திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் குடிநீா் வசதி மற்றும் தூய்மைப் பணிகளை

மேற்கொள்ள அலுவலா்களை நியமித்து பணிகள் மேற்கொள்ளப்படும். காவல்துறையின் மூலம் போதிய பாதுகாப்பு வசதிகள், தேவையான காவலா்களை நியமித்து, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தலைவா்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, தச்சநல்லூா் மண்டல உதவி ஆணையா் மகாலெட்சுமி, செய்தி-மக்கள்தொடா்பு அலுவலா்

ம.கயிலைச்செல்வம், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளா் செந்தில் தங்கதுரை, உதவி மக்கள்தொடா்பு அலுவலா் (செய்தி) ம.ச.மகாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments