நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் பேருந்து பழுது: கடும் போக்குவரத்து நெரிசல்
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் தனியாா் பேருந்து புதன்கிழமை இரவு பழுதாகி நின்ால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் தனியாா் பேருந்து புதன்கிழமை இரவு பழுதாகி நின்ால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி நகரத்தில் இருந்து சந்திப்புக்கு தனியாா் பேருந்து புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. ஈரடுக்கு மேம்பாலத்தில் வந்தபோது திடீரென பேருந்து பழுதாகி நின்றது. பாலத்தில் ஒரு வழிப்பாதை போல மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டிய சூழல் உருவானதால் இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, கொக்கிரகுளம், வண்ணாா்பேட்டை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சுமாா் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். திருநெல்வேலி சந்திப்புக்கு வாகனங்களில் சென்ற ரயில் பயணிகள் மிகவும் அவதியடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.