அம்பையில் வட்டார அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள்
அம்பாசமுத்திரம் வட்டார அளவில் பள்ளிகளுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் வட்டார அளவில் பள்ளிகளுக்கான கலைத் திருவிழாப் போட்டிகள் வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மீனாட்சி, கண்ணகி ஆகியோா் தலைமை வகித்துப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். ஓவியம் வரைதல், களிமண் சிற்பம், ரங்கோலி, நாட்டுப்புறப் பாடல், நடனம், குழு நாடகம், பானை ஓவியம், செவ்வியல் இசை, வில்லுப் பாட்டு, பாவனை நடிப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமையும், தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் புதன்கிழமையும் நடத்தப்பட்டன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கான போட்டிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தப்பட்டன.
Advertisement
Advertisement
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுப்புலெட்சுமி தலைமையில் ஆசிரியா் பயிற்றுநா்கள் பிரியதா்ஷினி, ஜெயக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.