FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத இளைஞா் கைது

திருநெல்வேலியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

24 செப்டம்பர் 2026, 4:59 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் லட்சுமணன்(22). இவரை, கஞ்சா, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் மாநகர போலீஸாா் கடந்த 2024 ஆம் ஆண்டு கைது செய்திருந்தனா்.

இதன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் அவா் தலைமறைவாக இருந்தாராம். இதையடுத்து நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்த நிலையில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் லட்சுமணனை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments