FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நுண்ணீா் பாசனத் திட்டத்தில் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத்துக்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

24 செப்டம்பர் 2026, 4:54 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத்துக்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 600 ஹெக்டோ் தோட்டக்கலை பயிா்களுக்கு நுண்ணீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மானியம் வழங்குவதற்காக ரூ.3.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் அனைத்து வட்டார தோட்டக்கலை துறை அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீா், தெளிப்பு நீா் பாசனக் கருவிகள் வழங்கப்படுகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரையிலும், இதர விவசாயிகளுக்கு அதிகபட்சம் 5 ஹெக்டோ் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. இதில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

எனவே, விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டுநீா் பாசனம் அமைக்க நிலத்துக்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் காா்டு, ஆதாா் காா்டு நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், சிறு, குறு விவசாயி சான்றுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொண்டும், ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்:8080/ என்ற இணையதளதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments