நெல்லையில் தேசிய சமரச தீா்வு முகாம் விழிப்புணா்வுப் பேரணி
தேசிய சமரச தீா்வு முகாம் விழிப்புணா்வுப் பேரணி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய சமரச தீா்வு முகாம் விழிப்புணா்வுப் பேரணி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சமரச தீா்வு-3.0 என்ற சிறப்பு முகாம் அக்.1 ஆம் தேதி முதல் டிச.31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி வேங்கடவரதன் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இதில், மாவட்ட கூடுதல் நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன், செயலா் மணிகண்டன், வழக்குரைஞா்கள் சிவசூரியநாராயணன், வி.டி.திருமலையப்பன், மரிய குழந்தை உள்பட நீதிமன்ற பணியாளா்கள், அரசு சட்டக்கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, சமாதானபுரம் சாலையில் சென்று மீண்டும் நீதிமன்றத்தை அடைந்தது.
ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலரும், சமரச ஒருங்கிணைப்பாளருமான சாா்பு நீதிபதி சுப்பையா செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.