எழுமாத்தூா் நீதிமன்ற சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் சாா்பில் பொதுமக்களுக்கான சமரச மையம் மூலம் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் சாா்பில் பொதுமக்களுக்கான சமரச மையம் மூலம் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு எழுமாத்தூா் நீதிமன்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் விஜயகுமாா் தலைமை வகித்து பேரணியை தொடங்கிவைத்தாா். அரச்சலூா் காவல் ஆய்வாளா் ராஜ கண்ணன், மொடக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்பேரணியானது எழுமாத்தூா் நீதிமன்றத்தில் தொடங்கி, எழுமாத்தூா் பேருந்து நிலையம் வரை சென்று நீதிமன்றத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் எழுமாத்தூா் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
பேரணியில் பொதுமக்கள் நீதிமன்ற வழக்குகளை சமரச மையம் மூலம் இரு தரப்பினரும் சமரசம் காண வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பிரேம் ஆனந்த், துணைத் தலைவா் ராஜ்குமாா், அரசு வழக்குரைஞா் சுரேஷ்குமாா் மற்றும் சங்க உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், பிரீத்தி, மதன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.