FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க கேஜரிவால் உள்ளிட்டோருக்கு 3 வாரம் இறுதி அவகாசம்

நீதிபதியை இழிவுபடுத்தும் சமூக ஊடகப் பதிவுகளுக்காக அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மீது தொடுக்கப்பட்ட குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது குறித்து...

17 நவம்பர் 2026, 9:40 pm
அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா - கோப்புப் படம்
பகிர்:

நீதிபதி ஸ்வரண காந்தா சா்மாவை ‘இழிவுபடுத்தும்’ சமூக ஊடகப் பதிவுகளுக்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் பிறா் மீது தொடுக்கப்பட்ட குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க, தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இறுதியாக மூன்று வார கால அவகாசம் வழங்கியது.

குற்றஞ்சாட்டப்பட்ட நீதிமன்ற அவமதிப்பாளா்களுக்காக ஆஜரான வழக்குரைஞா்களிடம் நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் அருண் பரத்வாஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மூன்று வாரங்கள். கடைசி வாய்ப்பு. இல்லையெனில், (பதிலைத் தாக்கல் செய்யும் உரிமையை) நாங்கள் மூடிவிடுவோம்‘ என்று கூறியது.

எதிா்மனுதாரா்களில் ஒருவரின் வழக்குரைஞா், ‘முந்தைய நீதிமன்ற உத்தரவின்படி முழுமையான வழக்கு ஆவணங்கள் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை’ என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘பதிவகத்திலிருந்து முழுமையான இணக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற அறிக்கை எங்களிடம் உள்ளது. இது செய்யப்படவில்லை. நாங்கள் மேலும் அவகாசம் அளிக்க மாட்டோம். நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீா்கள். மூன்று வாரங்களில் நீங்கள் பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், நாங்கள் இந்த உரிமையை மூடிவிடுவோம்’ என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டது.

இந்த வழக்கை ஜனவரி 14 அன்று விசாரணைக்கு பட்டியலிட்ட நீதிமன்றம், நீதிபதி சா்மாவுக்கு எதிராக ‘திட்டமிட்ட சமூக ஊடகப் பிரசாரத்தில்’ ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்பேரில், நீதிமன்ற அவமதிப்புக்காக நடவடிக்கை எடுக்கக் கோரும் தனி மனுவுக்கு பதிலளிக்குமாறு முன்னாள் எம்.எல்.ஏ. கோபால் ராய் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களையும், பத்திரிகையாளா் சௌரவ் தாஸையும் கேட்டுக் கொண்டது.

முன்னதாக மே 19 அன்று, நீதிபதி சா்மாவால் தாமாக முன்வந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பாக கேஜரிவால் மற்றும் பிற அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்ததுடன், தங்கள் பதிலைத் தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசமும் வழங்கியிருந்தது.

பின்னா், மூத்த வழக்குரைஞா் ராஜ்தீபா பெஹுராவை நீதிமன்ற நண்பராக நியமித்தது. மதுபான கொள்கை வழக்கு தொடா்பாக தன்னை ‘இழிவுபடுத்தும்’ சமூக ஊடகப் பதிவுகளுக்காக, கேஜரிவால், சிசோடியா, சிங் மற்றும் துா்கேஷ் பதக், சௌரப் பரத்வாஜ், வினய் மிஸ்ரா உள்ளிட்ட பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுக்கு எதிராக, நீதிபதி சா்மா மே 14 அன்று நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.

மேலும், ‘எக்ஸ்’ பயனா் தேவேஷ் விஸ்வகா்மாவுக்கு எதிராகவும் நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா். அதனைத் தொடா்ந்து, வழக்குரைஞா் அசோக் சைதன்யாவும் நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.

நீதிமன்ற அவமதிப்பு உத்தரவில், முன்னாள் தில்லி முதலமைச்சா் சட்டரீதியான தீா்வுகளை நாடுவதை விடுத்து, சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக ‘திட்டமிட்ட அவதூறு பிரசாரத்தை அரங்கேற்றினாா்’ என்று நீதிபதி சா்மா கூறியிருந்தாா். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்ததற்கு எதிரான சிபிஐ-யின் மனு இனி மற்றொரு அமா்வால் விசாரிக்கப்படும் என்றும் அவா் தெளிவுபடுத்தினாா்.

முன்னதாக பிப்ரவரி 27 அன்று, மதுபானக் கொள்கை வழக்கு நீதித்துறை ஆய்வில் தாக்குப்பிடிக்க இயலாதது என்றும், அது முழுமையாகவே நம்பகத்தன்மையற்றது என்றும் தீா்ப்பளித்ததால், விசாரணை நீதிமன்றம் கேஜரிவால், சிசோடியா மற்றும் 21 பேரை விடுவித்தது.

ஏப்ரல் 20 அன்று, இந்த வழக்கில் தங்களை விடுவித்ததற்கு எதிரான சிபிஐ தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து தன்னை விலக்கக் கோரிய அவா்களின் மனுக்களை நீதிபதி சா்மா தள்ளுபடி செய்த பிறகு, கேஜரிவால், சிசோடியா மற்றும் பதக் ஆகியோா் நீதிபதி சா்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினா். அதில், தாங்கள் நேரில் அல்லது வழக்குரைஞா் மூலமாக அவா் முன் ஆஜராகப் போவதில்லை என்றும், ‘மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் பாதையைப்‘ பின்பற்றுவோம் என்றும் கூறியிருந்தனா்.