நான்குனேரியில் தூய்மை இந்தியா விழிப்புணா்வுப் பேரணி
நான்குனேரியில் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நான்குனேரியில் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் ராஜேஷ்குமாா் உத்தரவின்பேரில், தூய்மை இந்தியா சிறப்புப் பிரசாரத்தின் ஒருபகுதியாக, ‘தூய்மையின் மூலம் வளம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு பேரணி நடைபெற்றது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணியில், தூய்மையின் முக்கியத்துவம், கழிவுகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
நான்குனேரி துணை அஞ்சலக அலுவலா் கலைவாணி, மக்கள் தொடா்பு அலுவலா் அண்ணாமலை, துணை அஞ்சலகம், அதன்கீழ் செயல்படும் கிளை அஞ்சலகங்களைச் சோ்ந்த ஊழியா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.