திட்டப் பணிகளை தொடங்க வலியுறுத்தி செப்.18இல் கிராம மக்கள் உண்ணாவிரதம்
சாத்தான்குளம் அருகே திட்டப் பணிகளை தொடங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (செப். 18) உண்ணாவிரதம் இருக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே திட்டப் பணிகளை தொடங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (செப். 18) உண்ணாவிரதம் இருக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
ஆழ்வார்திருநகரி ஒன்றியம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியை கனிமொழி எம்.பி. மத்திய அரசின் சன்சத் ஆதர்ஷ்கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் அண்மையில் தத்து எடுத்தார். அதன்படி அக்கிராமத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முதற்கட்டமாக ரூ. 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் நிதி ஒதுக்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
எனவே, அனைத்து திட்டங்களையும் உடனடியாக தொடங்க வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.