மணப்பாடு தூயஆவி ஆலயத்தில் மகிமைப் பெருவிழா
மணப்பாடு தூயஆவி ஆலய வளாகத்தில் திருச்சிலுவை மகிமைப் பெருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.
மணப்பாடு தூயஆவி ஆலய வளாகத்தில் திருச்சிலுவை மகிமைப் பெருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, மெய்யான திருச்சிலுவை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலி, மகிமைப் பெருவிழா மறையுரை, திருச்சிலுவை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதில், தூயஆவி ஆலய பங்கு மக்கள் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தூயஆவி ஆலயக் குழுத் தலைவர் கயஸ், குழு உறுப்பினர்கள், கோம்பிரியா சபையார், ஹெர்மல் மாதா சபை மக்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.