FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின்வாரிய ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

கோவில்பட்டி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் சுமார் 11 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

கோவில்பட்டி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் சுமார் 11 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டான் ஜெகஜோதி நகரைச் சேர்ந்த சாலமோன் மனைவி லலிதா (52). கயத்தாறில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மற்றும் இவரது குழந்தைகள் திங்கள்கிழமை வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.  இந்நிலையில், இவரது வீட்டுக்கு வந்த லலிதாவின் சகோதரர் லெனின், வீடு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாராம். பின்னர் சகோதரிக்கு தகவல்  தெரிவித்தாராம். இதையடுத்து அங்கு வந்த லலிதா வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த சுமார் 11 பவுன் நகை திருடுப் போயிருப்பது தெரியவந்தது.  இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments