ஜோர்டானில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி, 40 பேர் காயம்
ஜோர்டானில் தேவாலயத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு பற்றி....
ஜோர்டானில் இறுதிச்சடங்கின் போது தேவாலயத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகினர்.
ஜோர்டானின் கராக் என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
ஜோர்டானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளில், கைத்துப்பாக்கிகளை ஏந்தியபடி உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள் தேவாலயத்தை நோக்கி சுடுவது காட்டப்பட்டது. பின்னர், துப்பாக்கியுடன் தோன்றும் மூன்றாவது நபரும் சுடத் தொடங்க, மூவரும் தேவாலயத்தை நோக்கி ஓடுகின்றனர்.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதல் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் நடத்தப்பட்டது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் யாரேனும் பிடிக்கப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்டார்களா என்பது குறித்த விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
தலைநகர் அம்மானிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கராக், சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் வசிக்கும் இடமாகும். இந்த தாக்குதலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
Gunmen opened fire during a funeral at a church in Jordan on Friday, killing seven people and wounding 40 others, authorities said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.