FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எட்டயபுரத்தில் இன்று பாரதி விழா தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளை அமைப்பான பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் 54 ஆவது ஆண்டு மகாகவி பாரதி விழா சனி, ஞாயிறு (செப். 26, 27) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளை அமைப்பான பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் 54 ஆவது ஆண்டு மகாகவி பாரதி விழா சனி, ஞாயிறு (செப். 26, 27) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

தொடக்க நாளான சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பாரதி இல்லத்திலிருந்து பாரதி மணிமண்டப வளாகம் வரை தமிழ்நாடு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலர் பாலமுருகன் தலைமையில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், பள்ளி மாணவர், மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கும் ஊர்வலம் நடைபெறுகிறது.

பின்னர், மணிமண்டப வளாகத்தில் நடைபெறும் விழாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் து.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

Advertisement

Advertisement

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வெ.சுப்பாராஜ், பாரதி உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கிறார். சங்கத் தலைவர் வெங்கடேஷ்ராஜா வரவேற்கிறார்.

பின்னர், விடுதலைப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டிபாரதியின் உருவப் படத்தை, எழுத்தாளர் இளசைமணியன் திறந்துவைத்துப் பேசுகிறார்.

இரவு 9 மணிக்கு கைலாசமூர்த்தி குழுவினரின் ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகம் உள்ளிட்ட கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (செப்.27) காலை 10 மணிக்கு "மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் கலை இலக்கிய ஆளுமை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். இந் நிகழ்ச்சிக்கு எஸ்.தோதாத்ரி தலைமை வகிக்கிறார். இதில் சந்திரகாந்தன்,காமராசு,ஆனந்த குமார்,நடராஜன்,முன்னாள் ஆசிய வளர்ச்சி வங்கி இயக்குநர் கே.எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்ட எழுத்தாளர்கள்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினர்கள்,பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

மாலை 5 மணிக்கு பள்ளி- கல்லூரி மாணவர், மாணவிகளின் கலைநிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கவிஞர் திலகபாமாவின் கவிதாஞ்சலி பாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இரவு 8.30 மணிக்கு "பாரதியின் பாடல்களில் விஞ்சி இருப்பது மண் உரிமையே,மனித உரிமையே' என்ற தலைப்பில் முனைவர் கு.ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறுகிறது. சங்கத் துணைச் செயலர் பாலசுப்ரமணியம் நன்றி கூறுகிறார். வழக்குரைஞர் நடேசன் தொகுத்து வழங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments