செப்.29இல் மெஞ்ஞானபுரத்தில் நடைபெறவிருந்த மறியல் போராட்டம் வாபஸ்
மெஞ்ஞானபுரத்தில் இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.
மெஞ்ஞானபுரத்தில் இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.
உடன்குடி - மெஞ்ஞானபுரம் வரையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 29ஆம் தேதி மெஞ்ஞானபுரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்த சமாதானக் கூட்டம் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில், வட்டாட்சியர் சொ.வெங்கடாசலம், தூத்துக்குடி கலால் பிரிவு உதவி ஆணையர் ஆ.சிவகாமி, திமுக சார்பில் மெஞ்ஞானபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெபராஜன், உடன்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் வே.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் ஆண்டி, தேமுதிக ஒன்றியச் செயலர் செந்தூர்பாண்டி, நாம் தமிழர் கட்சி ஜோதிமணி கிறிஸ்டோபர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்வாணன், மக்கள் நலன்காக்கும் இயக்கம் முகைதீன், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் க.பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.