FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பராமரிப்புப் பணிகள் ஒத்திவைப்பு தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 ஆவது அலகில் மீண்டும் மின் உற்பத்தி

மின்பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 ஆவது அலகில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

மின்பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 ஆவது அலகில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

எனினும், 2 ஆவது, 3 ஆவது அலகுகளில் பராமரிப்பு பணிகள் தொடருவதால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பராமரிப்புப் பணிக்காக  2 ஆவது அலகில் வியாழக்கிழமை இரவு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த அலகில் 7 நாள்களுக்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, 5 ஆவது அலகில் ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்தும், 3 ஆவது அலகில் கடந்த 8 ஆம் தேதியிலிருந்தும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

மூன்று அலகுகளிலும் ஒரே நேரத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

 இதையடுத்து, மின் வெட்டு ஏற்படும் சூழல் உருவானதால் 2 ஆவது அலகில் 4 நாள்கள் மட்டும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்த அதிகாரிகள் உடனடியாக 5 ஆவது அலகில் மின் உற்பத்தியை தொடங்க உத்தரவிட்டனர். பராமரிப்புப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு 5 ஆவது அலகில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

 இரண்டாவது, 3 ஆவது அலகுகளில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அனல்மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments