FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமை வன திருப்பதி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

வன திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

வன திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

குரும்பூர் அருகே உள்ள புன்னைநகர் வன திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி 2ஆவது சனிக்கிழமையையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு  கோ பூஜை, 6 மணிக்கு மூலவர் திருமஞ்சனம்,காலை 8:30 மணிக்கு திருவாராதனம், தளிகை மற்றும் சாத்துமுறை கோஷ்டி நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று கோவிந்தா, கோவிந்தா என  முழக்கமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி பக்தர்களுக்கு காலை 10 மணி முதல் ஆலய நிர்வாகம் சார்பில் அன்னதானம் செய்யப்பட்டது. மேலும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி  பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கைங்கர்யதாரர் பி.ராஜ கோபால் தலைமையில் நிர்வாகிகள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments