முன்னாள் பேரூராட்சி உறுப்பினரை கத்தியால் குத்தியதாக 7 பேர் மீது வழக்கு
சாத்தான்குளத்தில் முன்னாள் பேரூராட்சி உறுப்பினரை கத்தியால் குத்தியதாக, 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் முன்னாள் பேரூராட்சி உறுப்பினரை கத்தியால் குத்தியதாக, 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சாத்தான்குளம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பாபு சுல்தான் (43). முன்னாள் பேரூராட்சி உறுப்பினரான இவர், அதிமுக வார்டு செயலராக உள்ளார். இவரது குடும்பத்தினர் பள்ளிவாசல் ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பாபு சுல்தானுக்கு இறைச்சி கொடுக்காமல் சென்ற பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், ஜமாத் துணைத் தலைவர் மகதூம், இஸ்தாக், எதிரிஸ், புகாரி, அனிப், அசாருதீன், யூசுப் ஆகிய 7 பேர், பாபு சுல்தானை கத்தியால் குத்தி காயப்படுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த பாபு சுல்தான், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின்பேரில் மகதூம், இஸ்தாக் உள்ளிட்ட 7 பேர் மீது சிறப்பு உதவி ஆய்வாளர் எழிலரசன் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.