FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்று பிளஸ் 2 தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் 20,105 பேர் எழுதுகின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை 20,105 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். மேலும் 956  தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை 20,105 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். மேலும் 956  தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

மேல் நிலை பொதுத் தேர்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக நடத்திடும் பொருட்டு தேர்வுப்பணியில் பங்குபெறும் ஆய்வு அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கு விளக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டன.

பிளஸ் 2 பொதுத் தேர்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் 65 மையங்களில் 20,105 மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர். மேலும் 4 தேர்வு மையங்களில் 956 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத காலை 9.45 மணிக்கு தேர்வு மைய அறைக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுதும் மாணவர், மாணவிகள்  மற்றும் தனித்தேர்வர்கள் முன்னரே தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டு, தேவையான எழுதுபொருள்கள் அனைத்தையும் எடுத்துவர வேண்டும்.

Advertisement

Advertisement

தேர்வுகள் நடைபெறும் நாள்களில் தேர்வு மைய வளாகத்தினுள் செல்லிடப்பேசிகளை எடுத்துவர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவுரை தேர்வுப்பணியில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பொருந்தும். தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments