காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா
சாத்தான்குளம் அருகே முதலூர் தர்மாபுரியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே முதலூர் தர்மாபுரியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
கட்சியின் வட்டாரத் தலைவர் லூர்துமணி தலைமை வகித்தார். விவசாயப் பிரிவுத் தலைவர் தியாகு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் யோகபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலர் தினேஷ் வரவேற்றார்.
முன்னாள் எம்எல்ஏ ராணிவெங்டேசன் கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபரிராயன், கருங்குளம் வட்டார செயலர் பக்கப்பட்டி விஜயகுமார், முன்னாள் இளைஞரணித் தலைவர் ஈசாக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கிராம கமிட்டித் தலைவர் ஜாண்சன் நன்றி கூறினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.