கோவில்பட்டி கோயிலில் மகா சிவராத்திரி கொடியேற்றம்
கோவில்பட்டி இந்து இசை வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீகுருநாதர் சமேத ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டி இந்து இசை வேளாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீகுருநாதர் சமேத ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலையில் பூரண கும்ப ஜெபம் நடைபெற்றது. பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் காப்பு கட்டப்பட்டது. மாலை 5.30 மணிக்கு மேல் கொடிப்பட்டத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கொடியேற்றத்துக்கு பின்னர் நந்தி, பலிபீடம் மற்றும் கொடி மரம் ஆகியவற்றுக்கு 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.