FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூத்துக்குடி துறைமுகம், ஸ்டெர்லைட் ஆலையில் பாதுகாப்பு வார விழா தொடக்கம்

தூத்துக்குடி வஉசி துறைமுகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையில் பாதுகாப்பு வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தூத்துக்குடி வஉசி துறைமுகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையில் பாதுகாப்பு வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 45ஆவது பாதுகாப்பு வார தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, துறைமுகப் பொறுப்புக் கழக துணைத் தலைவர் சு. நடராஜன் பாதுகாப்பு கொடியை ஏற்றி வைத்தார். அனைவரும், பாதுகாப்பு உறுதிமொழியேற்றனர்.

நிகழ்ச்சியில், துறைமுக துணை பாதுகாவலர் கேப்டன் அமீத் கபூர், தலைமை பொறியாளர் பாட்டீல், துறைமுக பாதுகாப்பு ஆய்வக உதவி நிர்வாகி நாகமணி மிஸ்ரா, பாதுகாப்பு அதிகாரி முத்துக்கிருஷ்ணன், மூத்த துணை போக்குவரத்து மேலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

ஸ்டெர்லைட் காப்பர் ஆலை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையில் 45ஆவது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, ஸ்டெர்லைட் காப்பரின் தலைமை நிர்வாக அதிகாரி பி. ராம்நாத் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குநர் அப்பாவு சாம்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். தொடர்ந்து, தொழிற்சாலையில் ஊழியர்கள் அமைத்திருந்த பாதுகாப்பு குறித்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

ஸ்டெர்லைட் காப்பரின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை பொது மேலாளர் குமாரவேந்தன், தலைமை பாதுகாப்பு அதிகாரி சந்தீப் ஆச்சார்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு வகையான பாதுகாப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments