FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள் எம்.எல்.ஏ.வுடன் சந்திப்பு

ஈரான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட வீரபாண்டியன்பட்டணம் மற்றும் பெரியதாழை பகுதியை சேர்ந்த ஏழு மீனவர்கள் தங்களை

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

ஈரான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட வீரபாண்டியன்பட்டணம் மற்றும் பெரியதாழை பகுதியை சேர்ந்த ஏழு மீனவர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுத்த திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி கூறினர்.
வீரபாண்டியன்பட்டணத்தைச் சேர்ந்த சுஜேய், சேவியர், பெனிட்டா, ஆரோக்கியராஜ் மற்றும் பெரியதாழையை சேர்ந்த விக்டர், பிரசாந்த், அஜய் ஆகிய 7 மீனவர்கள் ஈரான் நாட்டில் முகம்மது சலா என்பவரிடம் வேலைக்கு சென்றுள்ளனர்.  இந்நிலையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி ஊதியப் பிரச்சனை காரணமாக பாஸ்போர்ட்களை பறித்து விட்டு ஏழு மீனவர்களையும் வேலையில் இருந்து நீக்கி வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் தாயகம் திரும்ப வழியில்லாமலும், உணவு இன்றியும் கஷ்டப்படுவதாக, தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
இதைத் தொடர்ந்து இங்கு அவர்கள் குடும்பத்தினர்கள், ஈரானில் சிக்கி தவிக்கும் தங்கள் உறவினர்களை மீட்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்,   கனிமொழி எம்பியிடம் தெரிவித்தார். 
அவர் மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்து, இந்திய வெளியுறவுத் துறை மூலம் ஈரான் சிக்கி தவித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததின்பேரில் 7 மீனவர்களும் தாயகம் திரும்பி தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர். ஊர் திரும்பிய மீனவர்கள்  திருச்செந்தூர் எம்எல்ஏ அலுவலகம் வந்து எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அங்கிருந்து தொலைபேசி மூலம் கனிமொழி எம்பிக்கும் நன்றி தெரிவித்தனர். 
அப்போது தி.மு.க. மாநில மாணவரணி துணைச் செயலர் உமரி சங்கர், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் செங்குழி ஏ.பி. ரமேஷ், நகர பொறுப்பாளர் வாள் சுடலை, மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளர் கிருபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments