வேப்பலோடை அரசுப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம்
வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
வேப்பலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு பள்ளித் தலைமையாசிரியர் சேகர் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ், அன்னை தெரசா கிராம பொதுநல சங்க பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் புளோரிடா வரவேற்றார்.
கூட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து நிகழாண்டு 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று பள்ளியின் இலக்கை அடைய அனைவரும் பாடுபட வேண்டும். கிராமப்புறங்களில் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், சங்கரநாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் செல்வம், கருப்பசாமி, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் கிரேஸ்லின் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.