FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தல்:  30 வழக்குகளுக்கு தீர்வு

தென் மண்டல அளவில் கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில் இதுவரை 30 வழக்குகளுக்கு தீர்வு

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

தென் மண்டல அளவில் கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில் இதுவரை 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் விசாரணை அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன்.
 தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நான்கு கட்டங்களாக நடைபெற்ற நிலையில்,  சில சங்கங்களில் தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. 
அந்த வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, தென் மண்டல அளவிலான விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் நியமிக்கப்பட்டார்.  இதையடுத்து,  தூத்துக்குடி,  விருதுநகர்,  மதுரை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன்,  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவநாதன்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்கள் விசாரணையின்போது உடனிருந்தனர்.
முதல்நாளான செவ்வாய்க்கிழமை 11 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 இதுகுறித்து விசாரணை அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் கூறியதாவது:  தென் மண்டலத்தில் தேர்தலின்போது முறைகேடுகள் நடைபெற்றதாக ஏறத்தாழ 500 வழக்குகள்  தொடரப்பட்டுள்ளது.  இதுவரை 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என்றார் அவர்.  
தொடர்ந்து புதன்கிழமையும் (டிச. 19) விசாரணை நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments