திருச்செந்தூரில் இலவச வீட்டுமனை கேட்டு மனு
திருச்செந்தூரில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பாஜக மற்றும் பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்செந்தூரில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு பாஜக மற்றும் பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் இரா.கோவிந்தராசுவிடம் தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி பொதுச்செயலர் கு.நெல்லையம்மாள் தலைமையில் பொதுமக்கள் தங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை வழங்க வேண்டுமென 170 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில், பாஜக ஒன்றியத் தலைவர் கிருஷ்ணகுமார், ஒன்றியச் செயலர் எ.எம்.சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஒன்றிய இளைஞரணித் தலைவர் முத்து, தளவாய்புரம் தங்கராஜ் மற்றும் திருச்செந்தூர் ஜீவா நகர், முத்துமாலையம்மன் கோயில் தெரு மற்றும் காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட தேரிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.